காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 21 Nov 2021 8:20 AM GMT (Updated: 21 Nov 2021 8:20 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் செலுத்தப்படுவது மட்டுமில்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் 7,17,567 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 3,04,156 பேர் 2-வது துணை தடுப்பூசியும் செலுத்தியுள்ள நிலையில் இதுவரை 1,23,583 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 500 இடங்களில் நடைபெற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் உள்ள பயனாளிகள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத பயனாளிகள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story