வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள பாம்பு

நன்னிலம் அருகே வீட்டிற்குள் 10 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது. பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே வீட்டிற்குள் 10 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது. பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.
10 அடி நீளமுள்ள பாம்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குவளைக்கால் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சேகர். இவர் வீட்டில் நேற்று இரவு திடீரென 10 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குவளைக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல் உடனடியாக நன்னிலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
தகவல் அறிந்ததும் நன்னிலம் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் சுவரில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் இந்த பாம்பை காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story