தேன்கனிக்கோட்டை அருகே ரவுடி கொலையில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்


தேன்கனிக்கோட்டை அருகே ரவுடி கொலையில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
x
தினத்தந்தி 23 Nov 2021 11:07 AM IST (Updated: 23 Nov 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே ரவுடி கொலையில் 2 பேர் ஓசூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே ரவுடி கொலையில் 2 பேர் ஓசூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ரவுடி கொலை
தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் மகேஷ் (34). கடந்த 20-ந் தேதி இரவு இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது சுரேசை, மகேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் மகேஷ் மற்றும் தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையை சேர்ந்த சிவா (32) ஆகியோர் ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடி கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நீதிமன்றத்தில் சரண் அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story