பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Nov 2021 10:25 PM IST (Updated: 26 Nov 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் மோகனா (வயது 17). இவர் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில தினங்களாக வயிற்றுவலியால் மோகனா அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story