கே.கரிசல்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு


கே.கரிசல்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 1:29 AM IST (Updated: 27 Nov 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னம்பட்டி கால்வாயில் இருந்து கே.கரிசல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

காரியாபட்டி, 
சென்னம்பட்டி கால்வாயில் இருந்து கே.கரிசல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
கண்மாய் 
 காரியாபட்டி தாலுகா கே.கரிசல்குளம் கண்மாய்க்கு சென்னம்பட்டி கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து நிரம்பி கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் உள்ள கரிசல்குளம் கழுவனச்சேரி, சித்து மூன்றடைப்பு, அல்லிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீமைக்கருவேல்மரங்கள் தான் உள்ளது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் சென்னம்பட்டி அணைக்கட்டு கால்வாயில் இருந்து மழைநீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் கரிசல்குளம், கழுவனச்சேரி, சித்து மூன்றடைப்பு, ஆகிய கண்மாய்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. 
நிலத்தடி நீர் மட்டம் 
இதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறு, போர் வெல் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள். காரியாபட்டி பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கே.கரிசல்குளம் கண்மாய் பகுதியிலிருந்துதான் போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த கண்மாய் பெருகி வருவதன் மூலம் காரியாபட்டிக்கு நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். சென்னம்பட்டி கால்வாய் பகுதியில் உள்ள தடுப்பணை கதவுகள் திறக்கப்பட்டு பல வருடங்களாகி விட்டதால் ஒரு சில இடத்தில் உள்ள கதவுகள் திறக்கப்பட முடியாமல் இருந்து வருகிறது. மேலும் உடைந்த கதவுகளையும் சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story