சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் சாதனை


சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் சாதனை
x
தினத்தந்தி 29 Nov 2021 10:14 PM IST (Updated: 29 Nov 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் சாதனை

திருப்பூர்,
15 நாடுகள் பங்குபெற்ற சர்வதேச அளவிலான கராத்தேபோட்டி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், ஈரான், ஈராக், ஸ்வீடன், துருக்கி உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் பல நாடுகளில் உள்ள நடுவர்கள் மதிப்பெண்கள் அளித்தனர். இப்போட்டி இந்தியா மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் சேர்ந்து நடத்தியது.இப்போட்டியில் திருப்பூர் சக்தி கராத்தே கிளப்பை சேர்ந்த பல பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். 
 கட்டா கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கிளாசிக் போலோ நிறுவனர் சிவராம், கே.வைத்தியநாதன் மற்றும் பேரடைஸ் குழும மீனாட்சிசுந்தரம் வழங்கினர். சக்தி கராத்தே கிளப் நிறுவனர் ஷிகன் சக்திவேல் தலைமை தாங்கினார். மாணவர்கள் கட்டா மற்றும் டீம் கட்டா பிரிவில் 13 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 1 வெண்கலப்பதக்கம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சோபூகாய், சிட்கோ, ரியு கராத்தே பயிற்சி பள்ளியினர் செய்திருந்தனர்.

Next Story