நோய் தாக்கி 12 ஆடுகள் செத்தன


நோய் தாக்கி 12 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 30 Nov 2021 12:47 AM IST (Updated: 30 Nov 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

நோய் தாக்கி 12 ஆடுகள் உயிரிழந்தன

விராலிமலை
விராலிமலை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக நோய் தாக்கி கால்நடைகள் தொடர்ந்து செத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்குடி கிராமம் தாளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னக்கண்ணு என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 9 செம்மறி ஆடுகள் செத்தன. இதேபோல அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரத்தில் மழையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான 2 செம்மறி ஆடுகளும், பழனியம்மாளுக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்றும் செத்தன.


Next Story