புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 30 Nov 2021 1:56 AM IST (Updated: 30 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிப்படை வசதிகள் வேண்டும் 
  மதுரை மாநகராட்சி ஹார்விபட்டியில் அமைந்துள்ள பழைய பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், ெதருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காயத்ரி, ஹார்விபட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
   விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தைகுளம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்கவில்லை. ஆதலால் இந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முத்துகுமார்  வத்திராயிருப்பு.
தெருவிளக்கு எரியவில்லை
   மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாஞ்சில் நகரில் தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. அதேபோல சாலை வசதியும் இல்லை. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து மீண்டும் எரிய செய்யவும், சாலை வசதியும் செய்து தர வேண்டும். 
குலசேகரன், உசிலம்பட்டி.
தேங்கி கிடக்கும் குப்பைகள் 
ராமநாதபுரம் மாவட்டம் அச்சந்தவிழ்த்தான்  பஞ்சாயத்துக்கு உட்பட்ட  கீழத்தெரு அக்கரைப்பட்டியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும்  உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
சிவன், அச்சந்தவிழ்த்தான்   
குண்டும், குழியுமான சாலை
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகரில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இந்த சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அவசர தேவைக்கு கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சரிசெய்யவார்களா?
உமைலிங்கம், விருதுநகர். 
வீணாகும் குடிநீர் 
 மதுரை காமராஜர் சாலை சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.  உடைந்த குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே குடிநீர் குழாயை சீரமைத்து தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க செய்வார்களா?
சிவா, மதுரை.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக ராமநாதபுரம் முதலிய பல்வேறு பகுதிகளுக்கு  செல்ல முடியும். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது பெய்த மழையினால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே பெரிய அளவில் விபத்து நிகழ்வதற்கு முன்னதாக சாலையை சீரமைப்பார்களா? 
கருப்பையா, தேவகோட்டை.
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
மதுரை பெத்தானியாபுரம் 21-வது வார்டில் உள்ள அண்ணா மெயின்ரோட்டில் கிருதுமால் நதியின் கிளை வாய்க்கால்,  வைகையை ஒட்டியுள்ள வி.பி.சித்தன் தெருவில் உள்ள சிந்தாமணி வாய்க்கால் ஆகியவை தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது இந்த பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் மேற்கண்ட வாய்க்கால் வழியாக கண்மாய்களுக்கு செல்கிறது.  இந்த நிலையில் இந்த வாய்க்கால் தூர்வாராததால் குப்பை, ஆகாயதாமரைகள் நிறைந்து கிடக்கின்றன. எனவே வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கருப்பையா, பெத்தானியாபுரம்.

Next Story