சாத்தான்குளம் அருகே தாம்போதி பாலத்தில் வெள்ளத்தில் ஆம்னி காருடன் இழுத்துச்செல்லப்பட்ட 4பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்
சாத்தான்குளம் அருகே தாம்போதி பாலத்தில் வெள்ளத்தில் ஆம்னி காருடன் இழுத்துச்செல்லப்பட்ட 4பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே தாம்போதி பாலத்தில் வெள்ளத்தில் ஆம்னி காருடன் இழுத்துச்செல்லப்பட்ட 4பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
திருமணத்திற்கு...
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நாராயண பெருமாள் மகன் ஆதிமூலம் (வயது59). இவரும், அதே ஊரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சரவணன்(45), பரமசிவன் மகன் முருகன் (31), சங்கரநாராயணன் மகன் பாலமுருகன்( 52) ஆகிய 4 பேரும் ஆம்னி காரில் சாத்தான்குளத்தில் நேற்று முன்தினம் இரவில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் சாத்தான்குளம் அருகேயுள்ள இவர்கள் வேலவன் புதுக்குளம் வந்தனர்.
வெள்ளத்தில் சிக்கினர்
அங்குள்ள தாம்போதி பாலத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியது. ஆனால், காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல ஆம்னி காரை செலுத்தினர். காட்டாற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆம்னி காருடன் 4பேரும் இழுத்து செல்லப்பட்டனர். சிறிது தூரத்தில் பெரிய கல்லில் ஆம்னி வேன் மோதி நின்றது. அதிலிருந்த 4 பேரும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
பத்திரமாக மீட்பு
இதை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தாம்போதியில் இறங்கி கயிறு கட்டி, வெள்ளத்தில் சிக்கியிருந்த 4 பேரையும் சுமார் 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். தற்போதைய காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஆம்னி கார் பெரிய கல்லில் மாட்டிக்கொண்டதால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தப்பியது.
Related Tags :
Next Story