இளம் பெண் பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


இளம் பெண் பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 3:50 PM GMT (Updated: 30 Nov 2021 3:50 PM GMT)

இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் பழ வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது

விழுப்புரம்

இளம்பெண் பலாத்காரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா அந்திலி கிராமத்தை ஏழுமலையின் மகன் சுரேஷ்(வயது 32). பழவியாபாரியான இவரும், 19 வயது பெண்ணும்,  கடந்த 2009-ம் ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது சுரேஷ், அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் கர்ப்பமடைந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுரேசிடம் வற்புறுத்தியபோது அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதை அடுத்து அந்தபெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இதனிடையே பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு குழந்தை இறந்ததால் மனஉளைச்சலில் இருந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

பழ வியாபாரிக்கு சிறை

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சுரேசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுரேஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.


Next Story