பூட்டிய வீட்டில் திருட்டு


பூட்டிய வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 1 Dec 2021 1:31 AM IST (Updated: 1 Dec 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

பூட்டிய வீட்டில் திருட்டு

நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்து பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இங்கு உள்ள வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் பூட்டிக்கிடந்த அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை, வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story