பரமக்குடி வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

பரமக்குடி வைகை ஆற்றில் ெவள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிைலயில் பரமக்குடி-எமனேசுவரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி
பரமக்குடி வைகை ஆற்றில் ெவள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிைலயில் பரமக்குடி-எமனேசுவரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம்
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து இரண்டாவது முறையாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதையொட்டி திறந்துவிடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது.
அந்த அணையில் இருந்து வைகை ஆற்றுக்கு 12 ஆயிரத்து 80 கன அடி தண்ணீரும், வலது பிரதான கால்வாயில் 1,085 கன அடி தண்ணீரும், இடது பிரதானக் கால்வாயில் 1,720 கனஅடி தண்ணீரும், பரளை ஆற்றில் 900 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் பரமக்குடி வைகை ஆற்றின் பகுதி முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி-எமனேசுவரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிட்டது.
எச்சரிக்கை
இதனால் பாலத்தின் கரையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்வையிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும் ஆபத்தை உணராமல் இளைஞர்களும், சிறுவர்களும், தண்ணீருக்குள் நின்று கொண்டு செல்போன்களின் மூலம் செல்பி எடுக்கின்றனர்.
இதுதவிர கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story