பிரசவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண தகவல் பலகை வைக்கக்கோரி வழக்கு


பிரசவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண தகவல் பலகை வைக்கக்கோரி வழக்கு
x

பிரசவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண தகவல் பலகை வைக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ெதாடரப்பட்டது.

மதுரை,

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இருவழி பிரசவங்களுக்குமே அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின்பு தாயும், சேயும் மருத்துவமனையில் 3 முதல் 5 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறி, பரிசோதனைக்கான செலவு உள்பட பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் விதிக்கப்படும் கட்டணம் மற்ற மருத்துவமனைகளின் கட்டணத்தில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவங்கள் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு வசூலிக்கப்படும் மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகையை வைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.  அப்போது நீதிபதிகள், மருத்துவ கட்டணம் என்பது ஒவ்வொருவரின் உடல்நல பிரச்சினைகளை பொருத்து மாறுபடும், என்றனர். பின்னர் இந்த மனுவை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story