புன்னக்காயலில் கடல் அலை இழுத்துச்சென்ற சிறுவன் கதி என்ன?

புன்னக்காயலில் கடல் அலை இழுத்துச்சென்ற சிறுவன் கதி என்ன?
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள மீனவ கிராமமரன புன்னைக்காயல் கிராமத்தின் நூறு வீடு பகுதியைச் சேர்ந்த ரொசில்டன் மகன் ஜாப்ரின் (வயது 15). அதேஊர் ரஷ்யா தெருவை சேர்ந்த அலெக்ஸ்( 15), தெற்கு தெருவைச் சேர்ந்த ஆஸ்ரின்( 15 ) ஆகியோர் நேற்று மாலையில் கடற்கரை ஓரமாக விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய அலை எழும்பி வந்ததில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துசெள்ளப்பட்டனர் இச்சம்பவத்தை பார்த்து அக்கம் பக்கத்தில் நின்ற இளைஞர்கள் கடலுக்குள் இறங்கி ஆஸ்ரின் மற்றும் அலெக்ஸ் ஆகியோரை காப்பாற்றினர். ஆனால் ஜாபரினை தேடி வருகின்றனர். இத் தகவலறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் தமிழக கடலோர காவல் துறை திருச்செந்தூர் தீயணைப்பு துறை அதிகாரி ஆனந்தி தலைமையிலும் மற்றும் கடலோர காவல் போலீசார் அவரை தேடி வறுகின்றனர். இதனால் புன்னைக்காயலில் நேற்று மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லவில்லை
Related Tags :
Next Story