சதுரகிரியில் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு


சதுரகிரியில் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 12:52 AM IST (Updated: 4 Dec 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் காரணமாக சதுரகிரியில் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

வத்திராயிருப்பு, 
தொடர் மழையின் காரணமாக சதுரகிரியில் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 
தொடர்மழை 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில்  அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலிப்பாறை, மாங்கனி ஓடை, எலும்பு ஓடை, கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை அந்த ஓடைகளின் வழியாக வந்து லிங்கம் கோவில் ஓடை, கலங்கரை அம்மச்சாரம்மன் கோவில் ஓடை, கல்லணை ஆறு வழியாக சென்று மகாராஜபுரம், மாத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு செல்கிறது.
நீர்மட்டம் அதிகரிப்பு 
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர். 
தொடர் மழையின் காரணமாக கண்மாய்களுக்கு தொடர்ச்சியாக நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதுடன், விவசாய பணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கூறினர்.

Next Story