தேங்கிய மழை நீரால் நோய் பரவும் அபாயம்


தேங்கிய மழை நீரால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 4 Dec 2021 1:34 AM IST (Updated: 4 Dec 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் எள்ளுகுட்டை பகுதியில் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீரை வெளியேற்றி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்:
கும்பகோணம் எள்ளுகுட்டை பகுதியில் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீரை வெளியேற்றி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ே்நாய் பரவும் அபாயம் 
கும்பகோணம் நகரின் மேற்கு எள்ளுகுட்டை பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழை பெய்தாலே மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிப்பது வழக்கம்.
கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக எள்ளுகுட்டை பகுதியில் மழைநீர் தேங்கி ஏரி போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி   நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க வடிகால் வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
வடிகால் வசதி 
எனவே நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் எள்ளுகுட்டை பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற நிரந்தரமாக வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story