மோட்டார் சைக்கிள் விபத்தில் நகராட்சி ஊழியர் பலி

ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் நகராட்சி ஊழியர் பலியானார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் நகராட்சி ஊழியர் பலியானார்.
ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 56). ராணிப்பேட்டை நகராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை வக்கீல் தெரு அருகே பைபாஸ் சாலையில் சென்றபோது, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த வாசுதேவன், ஆற்காடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story