திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Dec 2021 7:53 PM IST (Updated: 6 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் முன்பு அமாவாசையையொட்டி கோவில் திறக்காததை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தொற்று காலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வினோத் கண்ணா உள்பட நிர்வாகிகள் 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story