கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம்-ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
தமிழகத்தில் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
நெல்லை:
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருளோ, மதுவோ கிடையாது. கள் ஒரு உணவுப்பொருளாகும். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கள் தடை செய்ய வேண்டிய போதைப்பொருள்தான் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி என பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story