புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் கொடி நாள் வசூல்

ரூ.1 கோடியே 19 லட்சம் கொடி நாள் வசூல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் வசூலை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்து கூறியதாவது:- இந்தியாவை பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடி நாள் வசூலை உண்டியலில் பணம் செலுத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிநாள் நிதிவசூல் மூலம் வரும் நிதியினை முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-ம் ஆண்டிற்கு இலக்கான ரூ.1 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரத்தை விட அதிகமாக ரூ.1 கோடியே 19 லட்சத்து 18 ஆயிரத்து 900 கொடிநாள் நிதிவசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இதேபோன்று நடப்பு 2021-ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 78 ஆயிரம் கொடிநாள் நிதிவசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக நிதி வழங்கி முன்னாள் படைவீரர்கள் நலனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். இதில் முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் செண்பகவல்லி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story