கடந்த 4 நாட்களில் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை குட்கா விற்பனை செய்த 275 பேர் கைது மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தகவல்


கடந்த 4 நாட்களில் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை   குட்கா விற்பனை செய்த 275 பேர் கைது மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2021 10:48 PM IST (Updated: 7 Dec 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 4 நாட்களில் பல்வேறு பகுதிகளில் குட்கா விற்பனை செய்த 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:
விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் சத்தியமூர்த்தி, ராணியார் பள்ளியின் முதல்வர் தமிழரசி, புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், ராணியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் 350 பேர் கலந்து கொண்டனர்.
பிரச்சினைகள் ஏற்பட்டால்...
தொடர்ந்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான சட்ட திட்டங்கள் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அதை நடக்காமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்னென்ன பாதுகாப்புகள் இருக்கின்றன, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் 181 1097 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
குற்றங்களை தடுப்பதற்கு...
கடந்த மாதம் நவம்பர் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை போலீசார் ஒரு லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு சென்று குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு மூன்று விதமான திட்டங்களை வைத்து செயல்படுகின்றோம். அதில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். பாலியல் குற்றங்களில் ஏற்கனவே ஈடுபட்ட குற்றவாளிகளை சரித்திர பதிவேடு ஆரம்பித்து கண்காணிப்பது.
குற்றத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் இருக்க கூடியவர்களுக்கு அந்த சூழலை உருவாக்காமல் தடுப்பது. இதுபோல குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு எந்தவிதமான சூழல்களைப் பாதுகாப்பாக உருவாக்குவது போன்ற கோணங்களில் குற்றங்களை தடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறோம்.
தற்போது அதிகப்படியான பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு அதிக அளவில் தாமாக முன்வந்து புகார்களை பதிவு செய்கின்றனர்.
குட்கா விற்பனை
பள்ளி, கல்லூரிகள் இருக்குமிடத்தில் இதற்கு முன்பு எந்தெந்த இடத்தில் போதை பொருட்களை வைத்து விற்பனை செய்வார்கள் அல்லது வேறு இடத்தில் விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றோம். இது தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாகவே தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் பெருமளவில் கஞ்சாவையும், தஞ்சாவூரில் ஒரு டன் மதிப்பிலான குட்காவையும் பறிமுதல் செய்துள்ளோம். கடந்த நான்கு நாட்களில் மட்டும் போலீசார் பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்த 275 பேரை கைது செய்துள்ளோம், என்று கூறினார்.

Next Story