ஆலயத்தில் நகை, உண்டியல் பணம் கொள்ளை


ஆலயத்தில் நகை, உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2021 11:16 PM IST (Updated: 9 Dec 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஆலயத்தில் நகை, உண்டியல் பணம் கொள்ளை

மணவாளக்குறிச்சி,
புதூரில் புனித லூசியா ஆலயம் உள்ளது. இங்கு ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று இரவு பிரார்த்தனை முடிந்த பின்பு ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் ஆலயத்தை திறந்த போது மாதா சொரூபத்தில் இருந்த 1½ பவுன் நகை திருடப்பட்டிருந்தது. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. இதனை பார்த்து ஆலய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து ஆலய செயலாளர் சகாயராஜ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலயத்தில் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story