திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 3¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் பட்டியல் குறித்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. அதில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளில் 67,321 ஆண் வாக்காளர்களும், 73,363 பெண் வாக்காளர்களும் 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்து நகராட்சிகளையும் சேர்த்து 123 வார்டுகளில் 1,21,117 ஆண் வாக்காளர்களும், 1,32,344 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில், செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் என மொத்தம் 10 பேரூராட்சிகளில் 150 வார்டுகள் உள்ளன. அதில் 58,827 ஆண் வாக்காளர்களும், 64,073 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 905 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 273 வார்டுகளில் 1,79,944 ஆண் வாக்காளர்களும், 1,96,417 பெண் வாக்காளர்களும், 25 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆரணி
ஆரணி நகர்மன்ற தேர்தலையொட்டி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது.
அதில், ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 28 ஆயிரத்து 324 பெண் வாக்காளர்களும், 25 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்களும், திருநங்கைகள் 7 பேர் என மொத்தம் 54 ஆயிரத்து 71 பேரும் நகர்மன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
அப்போது பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ், தேர்தல் உதவி அலுவலர் குமார், வருவாய் ஆய்வாளர் மோகன், ஆவின் தலைவர் பாரி பி.பாபு, அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார், தி.மு.க. வட்ட செயலாளர் எம்.பழனி, காங்கிரஸ் நகர தலைவர் டி.ஜெயவேல், பா.ஜ.க. ஓ.பி.சி. அணி நிர்வாகி வி.கோபி, வக்கீல் ஜெயகோபி உள்பட பலர் உடனிருந்தனர்.
களம்பூர்
ஆரணியை அடுத்த களம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தனி அலுவலர் ச.லோகநாதன் தலைமையில் பேரூராட்சிகளில் உள்ள 15 வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். அதில் பெண் வாக்காளர்கள் 6,105 பேரும், ஆண் வாக்காளர்கள் 5,547 பேரும், திருநங்கைகள் 2 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியலை வெளியிட்டு பேசினார்.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை நகராட்சி ஆணையர் ப்ரித்தி வெளியிட்டார். அதில், ஆண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 727 பேரும், பெண் வாக்காளர்கள் 13 ஆயிரத்து 826 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 553 பேர் உள்ளனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் ஜலால், அ.தி.மு.க. நகர செயலாளர் ஓட்டல் பாஷா, பா.ஜ.க. மாவட்ட ஊடகப்பிரிவு குருலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார செயலாளர் அப்துல்காதர், நகராட்சி அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் வெளியிட்டார். அதில், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 671 பேரும், பெண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 190 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 861 பேர் உள்ளனர்.
அப்போது இளநிலை உதவியாளர் தனமல்லி, கணினி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
போளூர்
போளூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முஹம்மத் ரிஸ்வான் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில், மொத்த வாக்காளர்கள் 21 ஆயிரத்து 599 பேர் உள்ளனர்.
அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காசி, குப்புசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலராக வெ.ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவர் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில், 6 ஆயிரத்து 880 பேர் உள்ளனர்.
Related Tags :
Next Story