குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்டோபர் (வயது 55). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். கிறிஸ்டோபருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவர்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இதில் கோபித்துக் கொண்டு மனைவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் விரக்தியில் இருந்த கிறிஸ்டோபர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story