அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Dec 2021 12:22 AM IST (Updated: 11 Dec 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதேபோல வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள அம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story