ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் திருட்டு


ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 12 Dec 2021 1:24 AM IST (Updated: 12 Dec 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் வடக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி ஆனந்தன். ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டான இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். இதனால் கீழாம்பூரில் உள்ள இவரது வீடு பூட்டியே கிடக்கிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் பின்புறம் வழியாக கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்தனர். அங்கு இருந்த கியாஸ் அடுப்பு, 2 பித்தளை விளக்கு, 2 காமாட்சி விளக்கு, வெள்ளி குடம், டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story