சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
கீழப்பழுவூர்:
சேறும், சகதியுமாக...
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காணிக்கைபுரம் ெரயில்வே கேட் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்தது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் அந்த சாலை உள்ளது.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து நேற்று ெரயில்வே கேட் அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
Related Tags :
Next Story