தாராபுரத்தில் கணவர் செல்போன் வாங்கித்தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தாராபுரத்தில் கணவர் செல்போன் வாங்கித்தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரம்:
தாராபுரத்தில் கணவர் செல்போன் வாங்கித்தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரம் நேரு நகரைச்சேர்ந்த காமராஜ் (வயது32) பெயிண்டர், இவருடைய மனைவி ஜீவிதா (28) இருவருக்கும் செல்போன் பேசுவதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜீவிதா தனக்கு என தனியாக புதிய செல்போன் வாங்கி தருமாறு காமராஜிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு காமராஜ் வீட்டில் இருக்கும் உனக்கு எதற்கு செல்போன் என காமராஜ் கேட்டுள்ளார்.அதற்கு வாங்கி கொடுக்க வேண்டுமென அடம்பிடித்து வந்த ஜீவிதா மன உளைச்சலுக்கு ஆளானதால் நேற்றுமுன்தினம் இரவு வீட்டு விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை போலீசில் புகார்
இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜீவிதாவின் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு ஜீவிதாவின் உடல் அவரது தந்தை அமாவாசையிடம் ஒப்படைத்தனர்.
அமாவாசை தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஜீவிதா தற்கொலைக்கான காரணங்களை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட ஜீவிதாவுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
Related Tags :
Next Story