கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தூண்கள் இடிக்கப்பட்டதால் பரபரப்பு

மீன்சுருட்டி அருகே கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தூண்கள் இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மரகதவல்லி தாயார் சமேத, ஸ்ரீதேவி, பூதேவி, வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் திருமண் சங்கு சக்கரத்துடன் இரு பக்கத்திலும் 2 தூண்கள் நிறுவப்பட்டு இருந்தன. இந்தநிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கியும் காலி செய்யாத கட்டிடங்களை இடிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது. இந்த பணியின்போது கோவிலின் நுழைவு பகுதியில் உள்ள இரு தூண்களும் இடிக்கப்பட்டன. பின்னர் அருகில் உள்ள அனுமார் கோவிலை இடிக்க முயன்றனர். இதை அறிந்து அப்பகுதி பக்தர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், தனியார் நிறுவனத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இடிக்கப்பட்ட இரண்டு தூண்களையும் திரும்பவும் நட்டு வைத்தனர். இந்த சம்பவத்தால் குருவாலப்பர் கோவில் பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story