மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருப்பூர் மாநகராட்சி 11, 12, 13, 14, 24, 25 உள்ளிட்ட வார்டுகளில் சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் நந்தகோபால் தலைமையில் நேற்று காலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அதிகாரியிடம் பொதுமக்கள் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் பகுதிக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். வீடுகள், வணிக கட்டிடங்கள் அனுமதிக்கான பலமடங்கு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக அலுவலக வாசல் முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் 6-வது வார்டு கருப்பராயன் கோவில் வீதி, கிருஷ்ணவேணி நகர், நடராஜ் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் 1-வது மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story