கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அரியலூர்:
அரியலூர் நகரில் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பெருமாள், சிவன், முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோதண்டராமசாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபட்டனர். அதிகாலை 4 மணிக்கே பெண்கள் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு பூசணிப்பூ வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story