வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு தேர்செய்ய 128 கிலோ வெள்ளி சேகரித்து முறைகேடு. எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு


வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு தேர்செய்ய 128 கிலோ வெள்ளி சேகரித்து முறைகேடு. எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Dec 2021 10:55 PM IST (Updated: 17 Dec 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா, வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு தேர்செய்ய 128 கிலோ வெள்ளி சேகரிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறநிலையத்துறை மீது பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

அணைக்கட்டு

பள்ளிகொண்டா, வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு தேர்செய்ய 128 கிலோ வெள்ளி சேகரிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறநிலையத்துறை மீது பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

பயிற்சி முகாம்

வேலூர் பெருமுகையில் உள்ள தனியார் கல்லூரியில் பாரதீய ஜனதா கட்சியினருக்கான 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் 10 ஆண்டுகளாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அங்குள்ள அவ்வையார்நகரில் 120 வீடுகளை இடித்துவிட்டு மேம்பாலம் அமைக்க போவதாக கூறி இருக்கிறார்கள். இது மனித குணமற்ற செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஓ.பி.சி.அணி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.கே.மோகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

128 கிலோ வெள்ளி முறைகேடு

முன்னதாக எச்.ராஜா வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில்  தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் இந்தக் கோவிலில் பல ஆண்டுகளாக வெள்ளித்தேர் செய்ய குழு அமைக்கப்பட்டு 128 கிலோ வெள்ளி பெறப்பட்டு தேர் செய்யப்படாமல் முறைகேடு நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்ட தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த ஒருவர்  வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் பணியாற்றிவரும் சிப்பந்திகளை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறாராம். இந்துக் கோவில் நிர்வாகத்தில் தலையிட இவர் யார்.

தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இந்துக் கவில்கள் இடிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசை கிறிஸ்தவ மிஷனரிகள் இயக்கி வருகிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 2016-ம் ஆண்டு  கணக்கில் இருந்ததைவிட 78 கிலோ வெள்ளி குறைந்துள்ளது. 

கலைக்க வேண்டும்

இந்து அறநிலைத்துறை என்பது இந்து தர்மங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களை அழிப்பதற்காகவே அறநிலையத்துறை உள்ளது. உடனடியா இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஆங்காங்கே உள்ள பரம்பரை தர்மகர்த்தாக்களிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும். இது போன்ற இந்து விரோத திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது குறித்து இந்துக்களிடம் நான் பிரசாரங்களில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை அடுத்து பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். 

Next Story