தென்காசியில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

தென்காசியில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி தென்காசியில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தென்காசி யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்.வி.கணேசன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி கார்த்திக், என்.சி.பி.இ. நிர்வாகி பிரான்சிஸ், மாரிக்கண்ணன், ஏ.ஐ.பி.ஒ.சி. நிர்வாகி வினோத்கண்ணா, ஏ.ஐ.பி.இ.ஏ. நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்., சங்கர், இசக்கி, வரதலட்சுமி ஆகியோர் போராட்டத்தின் நோக்கங்களை குறித்து பேசினர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சூசை, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் மாரியப்பன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சலீம் முகம்மது மீரான், சி.ஐ.டி.யூ. நிர்வாகி லெனின் குமார், டி.ஒய்.எப்.ஐ. கண்ணன் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story