தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து, தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநில அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் சுடலை வரவேற்று பேசினார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், அம்மா கிளினிக்குகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், அரசு வக்கீலும், மேலகரம் செயலாளருமான கார்த்திக் குமார், குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாத பாண்டியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story