கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2021 9:58 AM IST (Updated: 18 Dec 2021 9:58 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வாலிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 21). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவிந்தன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழ் சிந்தலவாடியை சேர்ந்தவர் அரவிந்தன் (27). இவர் ஓசூர் தின்னூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அரவிந்தன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன மேலாளர்
பாகலூர் அருகே வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (31). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்ப தகராறு காரணமாக சங்கர், வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story