83272 பேருக்கு கொரோனா தடுப்பூசி


83272 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Dec 2021 9:54 PM IST (Updated: 18 Dec 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

83 272 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். 15-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடந்தது. 689 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரெயில், பஸ் நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 83 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story