ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 19 Dec 2021 12:05 AM IST (Updated: 19 Dec 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 அப்போது தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் வந்து நின்றது. 

ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை பிரித்துப் பார்த்தபோது, அதில் 2 பொட்டலங்களில் மொத்தம் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. 

கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்து, வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story