ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்


ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Dec 2021 12:35 AM IST (Updated: 20 Dec 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

அன்னவாசல், 
புதுக்கோட்டையிலிருந்து சடையம்பட்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை அடைக்கலம் என்பவர் ஓட்டி சென்றார்.  அன்னவாசல் அருகே உள்ள கீழப்பளுவஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது நெறுஞ்சிகுடியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 23) என்பவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை சக பயணிகள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story