நீச்சல் பழக சென்ற என்ஜினீயரிங் மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு-உடலை தேடும் பணி தீவிரம்


நீச்சல் பழக சென்ற என்ஜினீயரிங் மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு-உடலை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Dec 2021 3:04 AM IST (Updated: 20 Dec 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

நீச்சல் பழக சென்ற என்ஜினீயரிங் மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கருப்பூர்:
நீச்சல் பழக சென்ற என்ஜினீயரிங் மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஓமலூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
என்ஜினீயரிங் மாணவர்
ஓமலூர் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருைடய மகன் சந்தோஷ்குமார் (வயது 18), இவர், சேலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், சந்தோஷ்குமார், நீச்சல் பழக முடிவு செய்தார். அங்குள்ள கிணற்றுக்கு சென்று நீச்சல் பழகவும் தயாரானார்.
கிணற்றில் மூழ்கி சாவு
அதன்படி அந்த கிணற்றுக்கு சந்தோஷ்குமார் சென்றார். கிணற்றில் நீச்சல் பழகிய போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.
தண்ணீரில் மூழ்கிய சந்தோஷ்குமார் உடலை தேடி வருகின்றனர். கிணறு நிரம்பிய நிலையில் உள்ளதால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story