மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது


மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 20 Dec 2021 2:04 PM IST (Updated: 20 Dec 2021 2:04 PM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

அரியலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story