முக கவசம் அணியாமல் வலம் வரும் பொதுமக்கள்


முக கவசம் அணியாமல் வலம் வரும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Dec 2021 6:21 PM IST (Updated: 21 Dec 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

போடி பஸ்நிலையம் பகுதியில் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் வலம் வருகின்றனர்.

தேனி :

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் பல இடங்களில் அவர் நேரில் சென்று முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் போடி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வலம் வருகின்றனர். 

இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போடி பகுதியில் திடீர் ஆய்வு செய்து முக கவசம் அணியாதவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story