கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 1:20 AM IST (Updated: 22 Dec 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், கஞ்சா விற்ற பெரம்பலூர் ஆலம்பாடி சாலை புதிய காலனி தெருவை சேர்ந்த டால்டா கண்ணன் என்ற ராஜு (வயது 35) மற்றும் வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (20) ஆகியோரை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான டால்டா கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story