ஆற்காடு அருகே விபத்துக்குள்ளான காரில் 15 மூட்டை குட்கா பறிமுதல்


ஆற்காடு அருகே விபத்துக்குள்ளான காரில் 15 மூட்டை குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jan 2022 12:00 AM IST (Updated: 1 Jan 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

விபத்துக்குள்ளான காரில் 15 மூட்டை குட்கா பறிமுதல்

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சாதிக்பாட்சா நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாக சாலையோரம் நிற்பதாக அப்பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. 

மேலும் காரில் தடை செய்யப்பட்ட 15 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 15 மூட்டை குட்காவையும் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story