திற்பரப்பு அருகே ஒரே கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா
திற்பரப்பு அருகே ஒரே கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குலசேகரம்,
திற்பரப்பு அருகே உள்ள கோட்டூர்கோணம் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து ஊருக்கு வந்தார். இதையடுத்து அவர் உள்பட அந்த வீட்டில் உள்ள 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் அந்த ஊரில் உள்ள 20 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் அந்த கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 22 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story