30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது

30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது
குன்னூர்
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காலநிலை மாற்றத்தின் காரணமாக கடும் பனிமூட்டமும் சாரல் மழையும் பெய்து வருகிறது. எதிரே வாகனங்கள் கூட சாலையில் வருவது தெரியாத அளவிற்கு மேக மூட்டம் நிலவி வருகிறது. நேற்று காலை முதலே குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. சாலை விரிவாக்கம் நடைபெறும் இடங்களில் மழையினால் மண் சேறாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வேன் ஒன்று வந்தது.
இதில் டிரைவர் உட்பட 3 பேர் இருந்தனர். காட்டேரி அருகே வந்த போது கடும் பனிமூட்டம் காரணாக நிலைதடுமாறி 30 அடி பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர்தப்பினார்கள். அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வேன் கவிழ்ந்தால் மேட்டுப்பாளையம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story