மண்டபம் அருகே பதுக்கிய மஞ்சள் மூடை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே வேதாளை பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் சுறா மீன் பாகங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
பனைக்குளம்,
இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே வேதாளை பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் சுறா மீன் பாகங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
ரகசிய தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ ்பெக்டர் மகேசுவரி தலைமையில் கியூ பிரிவு போலீசாரும் மற்றும் மண்டபம் சட்ட-ஒழுங்கு காவல் நிலைய போலீசாரும் இணைந்து வேதாளை தெற்கு பகுதியில் உள்ள சதாம் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 34 மூடைகளில் இருந்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் 12 மூடை களில் தடை செய்யப்பட்ட சுறா மீன் பாகங்கள், 100 கிலோ கடல் அட்டைகள் இருப்பதும் தெரியவந்தது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து மஞ்சள் மூடை மற்றும் சுறா மீன் உடல் பாகங்கள் மற்றும் கடல் அட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர் சதாமை தீவிரமாக தேடி வருகின்றனர். இவை இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப் பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story