சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

நாகை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை திருமணம் செய்ய உடந்தையாக இருந்த பெண்ணையும் தேடி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை திருமணம் செய்ய உடந்தையாக இருந்த பெண்ணையும் தேடி வருகின்றனர்.
சிறுமி கர்ப்பம்
நாகை அருகே கீழ்வேளூர் அரசாணிக்குளம் தெற்கு மடவிளாகத்தை சேர்ந்தவர் தீபக்(வயது 21). இவருக்கும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த 17 வயதான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை, தீபக் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் 2 பேரும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தீபக் திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
2 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தந்தையுடன் வசித்து வந்த சிறுமியை தீபக் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதும், இந்த திருமணத்திற்கு சிறுமியின் உறவினர் நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தீபக், இந்திராணி ஆகியோர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story