குங்கிலியநத்தம் ஏரி நிரம்பியது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் குங்கிலியநத்தம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாணாபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரி உள்ளது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடை காலங்களில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்லாமல் குடிநீர் பயன்பாட்டிற்கும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
குத்தகைதாரர்கள் மீன்களை பிடிப்பதற்கு ஏதுவாக ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.
இதுகுறித்து கடந்த 25-ந்தேதி ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொதுப்பணி துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஏரிக்கு தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். சாத்தனூர் இடதுபுற கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டுவந்து ஏரியை நிரப்பினர்.
தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story