கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை “தினத்தந்தி” செய்தி எதிரொலியாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை “தினத்தந்தி” செய்தி எதிரொலியாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் தாமிரபரணி ஆற்றை ஆதாரமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் 70 சதவீதம் நடைபெற்ற நிலையில் குடிநீர் வினிேயாகம் செய்யப்படும் குழாய்கள் சீராக உள்ளதா? என்பதை ஆய்வு செய்யாமல் அடுத்த கட்ட பணிக்கு அதிகாரிகள் சென்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து “தினத்தந்தி”யில் செய்தி வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதியில் மாநகராட்சி என்ஜினீயர் லலிதாம்பிகை அதிகாரிகள் முருகன், மகேஸ், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ரவி மற்றும் சிலர் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
குடிநீர் குழாய்
அப்போது தண்ணீர் லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் குழாய்களில் செலுத்தி குழாய்களில் சேதம் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? அடைப்பு இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளது என்றாலும், மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை புதிதாக பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் குழாய் வழியாக செலுத்தி அடுத்த கட்ட சோதனை செய்ய வேண்டும். அப்போது தான் அந்த தண்ணீர் சீரான முறையில் அனைத்து பகுதிகளுக்கு செல்கிறதா? என்பதை உறுதி செய்ய முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story