3600 படுக்கைகளை தயார்படுத்தும் பணி தீவிரம்


3600 படுக்கைகளை தயார்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Jan 2022 11:04 PM IST (Updated: 6 Jan 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3,600 படுக்கைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3,600 படுக்கைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்து காணப்பட்டது. தினசரி பாதிப்பு 25 வரை வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 80 தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியிருப்பதால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம். இல்லாவிட்டால் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்து, அபராத நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. 
மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையுடன் இணைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க ஏற்பாடு செய்துள்ளது. திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்க தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3,574 படுக்கைகள்
இதுதவிர தனியார் கல்லூரிகள், மண்டபங்களிலும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களையும் தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமாரிடம் கேட்டபோது, மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,448 படுக்கைகளும், மகாராஜா பொறியியல் கல்லூரி, நிப்ட் டீ கல்லூரி உள்ளிட்ட தனியார் பங்களிப்புடன் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் 2,166 படுக்கைகளும் அமைக்கும் பணி நடக்கிறது என்றார்.
பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் வினீத் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Next Story